நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் மாவு சத்து அல்லாத காய்கறிகளை உண்ணும் போழுது நமது உடல் எடை குறையும் என்று.
உடல் எடை குறைப்பதற்கு காய்கறிகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் ஊட்டச்சத்து மிகுந்த வைட்டமின்களும், கலோரிகளும், நீர் சத்தும் நிறைந்துள்ளதால் உடல் எடைக்கு மிக சிறந்தது. மேலும் ஊட்ட சத்து நிபுணர்களும் இம்முறையை பரிந்துரைக்கின்றனர்.
இக்காய்கறிகளில் உள்ள மிக குறைந்த கலோரிகளால் உடல் எடை குறையும் என்பது அச்சரயமான ஒன்று. மிக குறைந்த கலோரிகளால் ஆனா இந்த காய்கறிகள் நாம் அதிகமா உண்கின்றோம் என்ற எண்ணம் இல்லாமலும் நம் டயட் பிளான் பற்றி கவலை படாமல் இருக்கலாம்.
உடல் எடை குறைப்பதற்கு உதவும் சிறந்த 5 காய்கறிகள்
அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் காய் கறிகள் மூலம் உடல் எடை குறைக்க முடியும் . அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. கேரட்
2. காளான்
3. வெள்ளரிக்காய்
4. செலரி
5. காலிஃபிளவர்
6. பச்சை இலைகள்
1. கேரட்
கேரட் உங்கள் எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் சிற்றுண்டியாகவும் உதவுகின்றது. இது குறைவான ஸ்டார்ச் மற்றும் அதிக ஊட்டச்சத்து வாய்ந்த காய் கறியில் ஒன்றாகும் .
இது சூப்கள், சாலட், சாண்ட்விச்சில் பயன்படுத்தப்பட்டு எளிதில் சுவைக்க முடியும். அவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் அதிகமாக உள்ளது. எடை இழப்பு மட்டுமல்லாமல், கேரட் சாப்பிடுவதால் உங்கள் தோல் பளபளக்கும், கண் பார்வை கூடும், நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் உங்கள் ஆரோகியத்தை அதிகரிக்கும்.
2. காளான்
காளான் ஒரு மிக சிறந்த காய்கறி. அதை நம் உணவில் சேர்த்து உண்டால் உடல் எடை அதிகரிக்காது.
காளானை நீங்கள் சிக்கன்,முட்டை மற்றும் மட்டன் இவையோடு சேர்த்து சமைக்கலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. காளானை எதனுடனும் சேர்த்து சமைத்தாலும் அதன் சுவை தனித்தே இருக்கும்.
காளானை உட்கொள்வதால் நம் உடல் எடை குறையும் அது மட்டுமல்லாமல் டயாபடீஸ், மார்பு நோய்களில் இருந்தும் நம்மை காத்து கொள்ளலாம். மேலும் இதில் கேன்சரை தடுக்கும் ஆற்றல் உள்ளதால் இதனை உட்கொண்டால் நம் உடல் எடை குறையும்.
3. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் அதிக நீர் சத்து உள்ள காய். அதில் உள்ள நீர் சத்தால் நம் உடல் எடை குறையும். மேலும் நம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் . வெள்ளரி உடல் எடை குறைப்பதற்கு ஒரு சிறந்த காய்.
வெள்ளரியில் உள்ள நீர் சத்தினால் நம் உடலில் உள்ள நச்சு தன்மை அகற்றிவிடும் . அது மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாடுகள் நீங்கி நம் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். இதுவே உடல் எடை குறைப்பதற்கு மிக சிறந்த வழியாகும்.
4. செலரி
செலரி கீரை வகைகளில் ஒன்று. இது உடல் எடை குறைப்பதற்கு மிக சிறந்த ஒன்றாகும். அது மட்டும்மல்லாமல் வெள்ளரியில் இருக்கும் நீர் சத்து போல செலரியிலும் அதிக நீர் சத்து உள்ளது. செலரி நமக்கு நல்ல புத்துணர்ச்சியை குடுக்கும்.
5. காலிஃபிளவர்
காலிஃபிளவர் உடல் எடை குறைப்பதற்கு அதனை உட்கொள்ளும் பொழுது நம் உடல் எடை மேலும் குறையும்.
நாம் அதனை சாலட் செய்து சைவ உணவு போல எடுத்துக்கொள்ளலாம். காலிஃபிளவரை கேரட் உடனும் மற்றும் வேறு காய் கரிகளுடன் உட்கொள்ளும் போழுது நம்மை மேலும் இளமையாக வைத்து கொள்ள உதவும். நம் உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கி ஆரோக்கியத்தை தரும்.
மேலே கூறியுள்ள அணைத்து காய்கறிகள் நம் உட்கொள்ளும் போது நமது உடல் எடையில் சிறிது மாற்றம் ஏற்படும் . மேலும் நம் உட்கொள்ளும் இக்கரிகள் மூலம் நமக்கு மிக சிறந்த கலோரிகள் நாம் எடுத்து கொள்கிறோம்.
இக்காய்கறிகளை உண்ணும் போழுது நாம் இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.
முதல் ஆலோசனைக்கு Possible ஊட்டச்சத்து நிபுணரை இன்று தொடர்பு கொள்க